எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் 2015 – ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த தெலுங்கு படம் ‘ பாகுபலி’.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தப்படம் ‘டப்’ செய்து வெளியிடப்பட்டது. அதன் பின் வெளிவந்த இரண்டாம் பாகமும் இந்திய அளவில் மிகப்பெரிய வசூலை குவித்தது.
அந்த படத்தின் முதல் பாகத்தில், ராஜமாதா சிவகாமி தேவி ரோலில் நடிக்க முதலில் ஸ்ரீதேவியைத்தான் அணுகி உள்ளார், ராஜமவுலி.
அவரது நிபந்தனைகளை கேட்டு மயக்கம் போட்டு விழுந்து விட்டார், மவுலி.
10 கோடி ரூபாய் சம்பளம் , வேண்டும், 5 ஸ்டார் ஓட்டலில் முழு தளத்தையும், தனக்கும், தன் குழுவினருக்கும் ஒதுக்க வேண்டும் என்பது அந்த நிபந்தனைகளில் சில.
சரிப்பட்டு வராது என மும்பையில் இருந்து ஐதராபாத் திரும்பிய ராஜமவுலி, அதன்பிறகே அந்த கேரக்டருக்கு ரம்யா கிருஷ்ணனை ஒப்பந்தம் செய்துள்ளார்.
—