தென் இந்திய மொழிகளில் கலக்கி விட்டு, இந்திக்கும்
சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் ராஷ்மிகா மந்தனா.
இவர் நடித்து கடந்த ஆண்டு வெளியான தெலுங்குப்படமான ‘புஷ்பா -2’ இந்திய சினிமா வரலாற்றில் வசூல் சாதனை செய்துள்ளது.
நடிகைகள் தங்கள் வயதை சொல்வதில்லை.
ஆனால் ராஷ்மிகா மந்தனாவுக்கு , தனது வயதை
சொல்வதில் தயக்கம் கிடையாது.
இப்போது 28 வயதில் நடைபோடும் மந்தனா, இன்னும் இரண்டு நாட்களில் 29 –வது வயதில் அடி எடுத்துவைக்கிறார்.
ஆம். வருகிற 5 ஆம் தேதி அவரது பிறந்த நாள்.
இதனை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில்
பகிர்ந்துள்ளார்.
‘’இது எனது பிறந்த நாள் மாதம்- இதனால் உற்சாகமாக
இருக்கிறேன் –வயது உயரும்போது, பிறந்த நாள்
கொண்டாடும் ஆர்வம் குறையும் என்பார்கள் –ஆனால்
எனக்கு ஆர்வம் குறையவில்லை.29 வயது ஆகிறது என்பதை நம்பவே முடியலை’என
பதிவிட்டுள்ளார்.
ராஷ்மிகாவுக்கு ,அவரது ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்து
தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
—