தமிழில் கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களையும் வைத்து படம் இயக்கியவர் சுந்தர்.சி. ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஆகிய உச்ச நட்சத்திரங்களும் அடங்குவர்.
இவரது திரைப்படங்கள் முதலுக்கு மோசம் செய்வதில்லை.
நடிகர் விஷால்,சுந்தர்.சி இயக்கத்தில், ஆம்பள, ஆக்ஷன், மதகஜராஜா படங்களில் நடித்துள்ளார்.
இதில் மதகஜராஜா, 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது இந்தப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதையடுத்து சுந்தர். சி இயக்கத்தில் விஷால் மீண்டும் நடிக்கிறார். இந்தப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது.
விஷாலின் சம்பளம் மட்டும் ரூ.30 கோடி.
இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க சந்தானத்திடம் பேச்சு நடக்கிறது. அவர் மறுத்தால் வடிவேலு நடிக்கலாம்.
—