‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்தின் ஓடிடி உரிமையை 120 கோடி ரூபாய்க்கு அமேசான் நிறுவனம் வாங்கி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பான் இந்தியா’ படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் கூலியில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சவுபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு பிறகு, ரஜினியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் சத்யராஜ். இளம் வயதிலேயே ரஜினிக்கு அப்பாவாக ‘மிஸ்டர் பாரத் ‘படத்தில் நடித்தவர் சத்யராஜ் .
‘சிவாஜி’ படத்தில் வில்லனாக நடிக்க, அவரை அணுகினார், இயக்குநர் ஷங்கர். சத்யராஜ், ஏனோ, மறுத்து விட்டார். அதன் பிறகே சுமன் .வில்லன் ஆனார்.
கூலி படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. கூலி ஓடிடி உரிமத்தை ரூ. 120 கோடிக்கு அமேசான் பிரைம் நிறுவனம், வாங்கியுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் என்பதால், தொலைக்காட்சி உரிமையை அந்த நிறுவனமே வைத்து கொள்ளும்.
ஓடிடி விற்பனைக்கு, முதலில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திடம் , சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அமேசான் பிரைம் நிறுவனத்தின் விலை அதிகமாக இருந்ததால், அந்த நிறுவனத்துக்கு ஓடிடி உரிமையை கொடுத்துவிட்டதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் தகவல்
———-