புஷ்பா- 2’ சினிமா ரூ. 2 ஆயிரம் கோடி வசூல் செய்து ‘ரிகார்ட் பிரேக்’ செய்ய உள்ளது.
புஷ்பா முதல் பாகத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இதனையடுத்து புஷ்பா 2 படம் உருவாகி ரிலீசாகியுள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே நடித்த நட்சத்திரங்களுடன் ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் ஆகியோர் இணைந்தனர்.
‘புஷ்பா 2 தி ரூல் படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. முதல் நாளிலேயே 294 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இந்த படம், இதுவரை உலகம் முழுவதும் 1871 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் சில நாட்களில் படத்தின் வசூல் 2000 கோடி ரூபாயை எட்டும் என நம்பப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 கோடி ரூபாய் வசூலை எட்டிய படம் என்ற சாதனையை’ புஷ்பா-2’ படைக்க உள்ளது.
இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களில் அதிகபட்சமாக அமீர்கான் நடிப்பில் வெளியான ‘டங்கல் ‘ ரூ. 1950 கோடி வசூலித்தது.
அடுத்த இடத்தில் ரூ. 1810 கோடி வசூலுடன் பாகுபலி-2 இரண்டாவது இடத்தில் இருந்தது. .
—