ரூ 200 கோடி மதிப்புள்ள பணம் திருட்டு… திருப்பதி கோயில் நிர்வாகி திடுக்கிடும் தகவல்.

 

டிசம்பர்-29.
திருப்பதி பெருமாள் கோயில் உண்டிலை எண்ணும் போது ரூ 200 கோடி மதிப்புள்ள பணம் திருடப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் சச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் பெரிய ஜீயர் மடத்தின் பிரதிநிதியாக பங்ககேற்ற ரவிக்குமார் பல ஆண்டுகளாக ரூ 200 கோடி மதிப்புள்ள பணத்தை திருடியதாகவும் கடந்த 2023-ஆம் ஆண்டில் கையும் களவுமாகவும் பிடிபட்டார் என்றும் திருப்பதி தேவஸ்தானத்தின் உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி என்பவர் தெரிவித்ததால் இந்தப் பிரச்சினை பேசும் பொருளாகி உள்ளது. இந்த திருட்டு தொடர்பான ஆவணங்களையும் தேவஸ்தானத்தின் கண்காணிப்பு பிரிவிடம் அவர் வழங்கி உள்ளார்.

இதையடுத்து கண்காணிப்பு பிரிவு வெளியிட்ட ஆவணங்கள் படி கடந்த 2023- ஆம் ஆண்டு ஏப்ரல் 29- ஆம் தேதி உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி முடிந்து வீட்டுக்குப் புறப்பட்ட ரவிக்குமார் சோதனை செய்யப்பட்டார். அப்போது அவர் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 100 அமெரிக்க டாலர் மதிப்புள்ள நோட்டுகளை எடுத்துள்ளனர். அவற்றின் மதிப்பு ரூ 72 ஆயிரம் ஆகும். இது குறித்து கண்காணிப்பு அதிகாரி சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருப்பதி காவல் நிலையத்தில் வழக்குப் பதியபட்டது. விசாரணைக்குப் பிறகு ரவிக்குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்க செய்யப்பட்டது.

அதேநேரத்தில் ரவிக்குமாரும் அவருடைய மனைவியும் தங்களுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை ஒப்படைத்துவிடுவதாக திருப்பதி தேவஸ்தானத்திடம் கடிதம் கொடுத்தார். திருப்பதியில் மூன்று அறைகள் கொண்ட 8 வீடுகள் மற்றும் இரண்டு அறைகள் கொண்ட 5 வீடுகள் மேலும் சென்னையில் உள்ள சில அசையா சொத்துகள் ஒப்படைக்கப்பட்ட சொத்துகள் ஆகும்.

இது பற்றி கருத்து தெரிவித்த திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி. சாதராண ஒரு ஊழியரான ரவிக்குமார், பல கோடி ரூ பாய் மதிப்புள்ள சொத்துகளை சேர்த்தது ஆச்சரியமாக உள்ளது என்று கூறி உள்ளார். விரிவாக விசாரணை நடத்தினால் இதில் தொடர்புடைய பல அதிகாரிகளை அம்பலப்படுத்தலாம், ரவிக்குமாரிடம் இருந்து மற்றவர்களுக்கு கை மாறிய சொத்துக்களை மீட்கலாம் என்றும் பானு பிரகாஷ் ரெட்டி கேட்டுக் கொண்டு உள்ளார்.

ரவிக்குமார் கடந்த பல ஆண்டுகளில் திருடிய உண்டியல் பணத்தின் மதிப்பு ரூ 200 கோடி இருக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.

ஆனால் திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் இது குறித்து அதிகாரப் பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகதால் சர்ச்சை நீடிக்கிறது.
**

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *