மே.25
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதில் எந்தச் சிக்கலும் வராது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. அதன்படி, 2,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கியில் மாற்றிக்கொள்ளும் பணி நேற்று முன்தினம் முதல் நடைபெற்றுவருகிறது.
செப்டம்பர் மாதம் வரை 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுதல் தொடர்பான அனைத்து பணிகளும் சிக்கலின்றி நடக்கும். அதுதொடர்பாக ஏற்கனவே ஆய்வு செய்துள்ளோம். இதுவரை எந்த பெரிய பிரச்சினையும் இல்லை. ரிசர்வ் வங்கி வழக்கம்போல் நிலைமையை கண்காணித்து வருகிறது என்றார்.