சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கிய நாக் அஸ்வின்,தெலுங்கு நடிகர் பிரபாசை ஹீரோவாக வைத்து புதிய படம் டைரக்டு செய்கிறார்.
படம் குறித்த தகவல்களை ரசிகர்களுக்கு தெரிவிக்க தற்காலிமாக இந்த படத்துக்கு ‘புராஜெக்ட்-கே’என பெயர் சூட்டப்பட்டது.
வைஜெயந்தி மூவிஸ் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்த படத்தில் ராணா டகுபதி, அமிதாப்பச்சன், பசுபதி, தீபிகா படு்கோனே உள்ளிட்டோர் நடிக்கின்றனர்
வில்லன் வேடத்தில் இந்தப்படத்தில் நடிக்கும் கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.30 நாள் கால்ஷீட் தந்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்தப்படத்திற்கு ‘கல்கி 2898’ எனப் பெயரிடப்பட்டுள்ளது பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் கூடிய ஸ்பெஷல் வீடியோவை.படநிறுவனம் வெளியிட்டு படத்தலைப்பை அறிவித்துள்ளது. 2898 ஆம் ஆண்டு பூமியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் டீசரை படக்குழு வெளியிட்டது. நிகழ்ச்சியில் ,கமல்ஹாசன், பிரபாஸ், இயக்குனர் நாக் அஸ்வின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசும்போது,’,அமிதாப்பச்சன் ஜி வாழும் காலத்தில் வாழ்வதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்’ என்றார்.
இதற்கு மும்பையில் இருந்தபடி வீடியோகாலில் பேசிய அமிதாப், “இவ்வளவு அடக்கமாக இருப்பதை நிறுத்துங்கள் கமல். எங்கள் அனைவரையும் விட நீங்கள் மிகவும் பெரியவர்” என்று குறிப்பிட்டார்.
’கமலின் படங்கள் யதார்த்தம் நிரம்பியவை. ஒவ்வொரு படத்திலும் அவர் கடுமையாக உழைக்கிறார். அவர் நடித்த பாத்திரங்கள் மிகவும் அற்புதமானவை.. நாங்கள் இருவரும் இரண்டு படங்களில் சேர்ந்து நடித்துள்ளோம் ஆனால் இந்தப்படம் மிகவும் சிறப்பானதாக இருக்கும் ’என்றும் கமலை அமிதாப் புகழ்ந்து தள்ளினார்.
பல ஆண்டுகளுக்கு முன் கே.பாலசந்தர்,தனது டைரக்ஷனில் வெளியான படத்துக்கு கல்கி என பெயர் சூட்டி இருந்தார்.
இந்த கல்கி பிரமண்டமானது.
பாகுபலி போன்று இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
000