லியோ படப்பிடிப்பு நிறைவு, லோகேஷ் கனகராஜின் அடுத்த நடவடிக்கை ஆரம்பம்.

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்த முதல் படமான ‘மாஸ்டர்’ வசூலை வாரி இறைத்தது.

இந்த ஜோடி மீண்டும் ‘லியோ’ படத்துக்காக ஒன்றிணைந்தது. லலித் குமார் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.அர்ஜுன், சஞ்சய் தத்,, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. லியோ படத்தில் தனக்கான காட்சிகளை கடந்த வாரம் நடிகர் விஜய் நடித்து முடித்தார்.

இந்த நிலையில், ‘லியோ’ திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்

‘’.6 மாதங்களில் ,125 நாட்களாக  நடைபெற்ற ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. நடிகர்கள் மற்றும் படக் குழுவினருக்கு நன்றி ’என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

லியோவை அடுத்து விஜயின் 68- வது படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பது முடிவாகி விட்டது.

இதையடுத்த விஜயின் 69 வது படத்தை அட்லியும், 70 வது படத்தை ஷங்கரும் இயக்க உள்ளதாக தகவல்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *