லியோ, புஷ்பா 2 படங்களின் சாதனையை முறியடித்தநு எம்புரான்.

நடிகராக சினிமாவில் அறிமுகமான பிரிதிவிராஜ், ‘லூசிபர்’ என்ற மலையாளப்படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

மோகன்லால் ஹீரோவாக நடித்த அந்த படம் 2019- ஆம் ஆண்டு வெளியானது. 200 கோடி ரூபாய் வசூலித்தது.

ஒரு மலையாளப்படம், இத்தனை கோடிகளை குவித்தது, முதன் முறையாகும்.

‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘எம்புரான்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.

பிரிதிவிராஜ் இயக்கியுள்ள இந்த படத்திலும் மோகன்லாலே ஹீரோவாக நடித்துள்ளார். மோகன்லாலுடன் , மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுக்க நாளை ( வியாழக்கிழமை ) வெளியாகிறது, எம்புரான்.

இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு 21 -ஆம் தேதி தொடங்கியது.
முன்பதிவில் மட்டும் உலகம் முழுவதும் 60 + கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக ‘எம்புரான்’ படக்குழு தெரிவித்துள்ளது.

முன் பதிவு வசூலில் அல்லு அர்ஜுனின் புஷ்பா -2, விஜயின் ‘லியோ’ ஆகிய படங்களின் சாதனைகளை,, ‘எம்புரான்’ முறியடித்துள்ளது.

படம் வெளியான சில நாட்களிலேயே 300 கோடி ரூபாய் வசூலை தொட்டுவிடும் என்கிறார்கள் , படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *