செப்டம்பர், 12
கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த ரஜினிகாந்த்,வெள்ளித் திரையில் இருந்து விலகும் முடிவுக்கு வந்துள்ளார்.
பல ஆண்டுகளாக தோல்வி படங்களை தந்த ரஜினிகாந்த், அண்மையில் ஜெயிலர் எனும் சூப்பர் டூப்பர் படத்தை கொடுத்தார். இதுவரைஅந்த படம் 650 கோடி ரூபாய் வசூலித்து ரிகார்ட் பிரேக் செய்துள்ளது. இதனை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’ எனும் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார்.அவரது 170- வது படத்தை லைகா நிறுவனம்தயாரிக்க, ஞானவேல் டைரக்டு செய்கிறார்.
ரஜினிகாந்தின் 171 -வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தமிழ் சினிமாவின் ‘மோஸ்ட் வாண்டட்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதனை டைரக்ட் செய்கிறார்.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்காலிகமாக ‘தலைவர் 171 ‘ என படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.’இசை சுனாமி’ அனிருத் இசை அமைக்கிறார். கன்னடத்தில் உருவாகி இந்தியா முழுக்க வசூல் குவித்த கேஜிஎஃப் படத்துக்கு ஸ்டண்ட் காட்சிகளை அமைத்த இரட்டையர்கள் அன்பு -அறிவு,ரஜினி படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் படமே ரஜினிகாந்த் நடிக்கும் கடைசி படமாக இருக்கும். லோகேஷ் கனகராஜை, தனது வீட்டுக்கு நேரில் அழைத்து பேசிய ரஜினி, ‘சினிமாவுக்கு குட்பை சொல்லப்போகிறேன்.உங்கள் இயக்கத்தில் கடைசி படம் செய்ய விரும்புகிறேன்’என சொல்லி உள்ளார். இதனை தொடர்ந்தே ரஜினி -லோகேஷ் கனகராஜ்- அனிருத் –
சன் பிக்சர்ஸ் கூட்டணி அமைந்தது. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் -2 ஆகிய ஹிட் படங்களை தொடர்ச்சியாக கொடுத்த லோகேஷ், இப்போது ‘லியோ’படத்தின் இறுதி கட்டப்பணிகளில் பிஸியாக இருக்கிறார்.இதனை முடித்து விட்டு, ரஜினி படத்துக்கான வேலைகளை தொடங்க உள்ளார்.இது முழுக்க முழுக்க, லோகேஷ் பாணியிலான ஆக்ஷன் படமாக இருக்குமாம்.
இதனிடையே மலேசியா சென்றுள்ள ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் புகைப்படம் வெளியிட்டுள்ள அன்வர் இப்ராஹிம், ’ஆசிய மற்றும் சர்வதேச கலை உலகில் புகழ்பெற்ற ரஜினியை சந்தித்தேன்,
திரையுலகில் ரஜினிகாந்த் மேலும் சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய தலைவர்களை சந்தித்த கையோடு உலக தலைவர்களையும் பார்க்க கிளம்பிட்டார், தலைவர்.
000