மே.11
வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்றிரவு 11.30 மணி நிலவரப்படி, அந்தமான் நிகோபார் தீவுகளின் போர்ட்ஃ பிளேயரிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டிருந்தது. மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் மேலும் வலுப்பெற்று இன்று காலை மோக்கா புயலாக வலுப்பெற்றுள்ளது. இன்றிரவு இந்த மோக்கா புயலானது, தீவிர புயலாகவும், நாளை (மே.12.) மிகத் தீவிர புயலாகவும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோக்கா புயலானது, வடக்கு – வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, 14 ஆம் தேதி காலை மியான்மர்- வங்கதேசம் இடையே கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. காற்றின் ஈரப்பதத்தை ஈர்த்தபடி வடக்கு நோக்கி நகரும் இந்த மோக்கா புயலால், தமிழ்நாட்டில் இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.