வங்கிகளுக்கு அடுத்த மாதத்தில் 12 நாட்கள் லீவு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஏப்ரல்.27

இந்தியாவில் அடுத்த மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறைப்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியல்படி, மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் வேலை செய்யாது. மே மாதத்தில் வங்கி விடுமுறையில் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளும் அடங்கும். இருப்பினும், இந்த விடுமுறையானது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும்.

சிக்கிம் மாநிலத்தில் உள்ள வங்கியில் பணிபுரிவதாக இருந்தால், மே 15 அன்று விடுப்பு எடுத்தால், மே 13 முதல் மே 16 வரை நான்கு நாட்கள் நீண்ட வார விடுமுறையை பெறலாம். மே 13 (இரண்டாவது சனிக்கிழமை), மே 14 (ஞாயிறு), மே 16 சிக்கிம் தினம் ஆகும்.

ரிசர்வ் வங்கி விடுமுறை அட்டவணைப்பட்டி, மே 1 (திங்கட்கிழமை): மே தினம், மகாராஷ்டிரா தினம், மே 5 (வெள்ளிக்கிழமை): புத்த பூர்ணிமா – டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், உத்தரகண்ட், அசாம், பீகார், குஜராத், அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், மே 7: ஞாயிறு, மே 9 (செவ்வாய்): ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள், மே 13: இரண்டாவது சனிக்கிழமை, மே 14: ஞாயிறு, மே 16 (செவ்வாய்): மாநில நாள் – சிக்கிம், மே 21: ஞாயிறு, மே 22 (திங்கட்கிழமை): மகாராணா பிரதாப் ஜெயந்தி – குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், மே 24 (புதன்கிழமை): காசி நஸ்ருல் இஸ்லாம் ஜெயந்தி – திரிபுரா,
மே 27: நான்காவது சனிக்கிழமை, மே 28: ஞாயிறு ஆகியவை விடுமுறை நாட்களாகும்.

12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்றபோதும், ஆன்லைன் இணைய வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும். இதனால், வாடிக்கையாளர்கள் கவலைப்படத்தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *