‘எல்லாம் அவன் செயல் ‘ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ஆர்.கே.
அவரே அந்த படத்தை தயாரித்தார். சென்னையில்
அவர் புதிதாக சினிமா ஸ்டூடியோ ஒன்றை கட்டியுள்ளார்.
விலங்குகளை மையமாக வைத்து புதிய படம் ஒன்றையும் தயாரித்து வரும், ஆர்.கே., நாயகனாகவும் நடிக்கிறார்.
கதையை அவரே எழுதி இருக்கிறார்.
இந்த படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க வடிவேலுவை அவர் அணுகினார்.கையில் ஒரு கோடி ரூபாய் முன்பணத்துடன், வடிவேலுவை சந்தித்தார்.
ஆனால் வடிவேலு மறுத்துவிட்டார்.’ இப்போது நான் கநாநாயகனாக நடிக்க ஆரம்பித்து விட்டேன். வெறும் நகைச்சுவை கேரக்டர்களில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளேன்.. வேறு ஆளை பாருங்கள்’ என்று ஆர்.கே.யிடம் , முகத்தில் அறைந்த மாதிரி சொல்லி விட்டார்.
வடிவேலுவுக்கு உருவாக்கப்பட்ட கேரக்டரில் இப்போது , தம்பி ராமய்யா நடித்து வருகிறார். ஆர்.கண்ணன் இயக்கும் இந்த படத்தில் யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
—