வருமான வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்கும் சாப்ட் வேர், இனி எச்சரிக்கை தேவை !

ஆகஸ்டு, 05-

வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளக்காரர்களை கண்டறியும் நடவடிக்கைகளை வருமான வரித்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

மாதச்சம்பளம் பெறுவோர்களின் மொத்த ஆண்டு வருவாயில் இருந்து வீட்டு வாடகை, நன்கொடைகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளை கழிக்க வருமான வரி சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

அனைத்துக் கழிவுகளும் போக ஆண்டு வருவாய் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை.

வீட்டு வாடகை ஆண்டுக்கு 1 லட்சத்துக்குள் இருந்தால் வீட்டு வாடகை ரசீதுகளில் வீட்டு உரிமையாளர்களின் பான் கார்டு எண் தேவையில்லை என்ற விதிமுறை உள்ளது. மாதச் சம்பளம் பெறுவோர் பலர், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்ப்பித்து வருமான வரி விலக்கு பெறுகிறார்கள்.

இதை கண்டறிந்து அவர்கள் மீது 200% வரை அபராதம் விதிக்க புதிய Software ஒன்றை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. போலி ரசீதுகளை சமர்ப்பித்துள்ள பலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

கவனமா இருப்பது நல்லது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *