வலை தளங்களில் வைரலாகும் கார்த்தி போட்டோ!

உலக மல்யுத்தப் போட்டி. ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ’சூப்பர் ஸ்டார் ஸ்பெக்கடல்’ என்ற பெயரில் இந்த போட்டி நடக்கிறது. இதுவே இந்தியாவில் நடக்கும் முதல் WWE போட்டி.

இந்த போட்டியில் பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா கலந்துகொண்டுள்ளார். இவர் 16 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். ஹாலிவுட் நடிகரும் ஆவார்.ஐதராபாத்தில், ஜான் சீனாவை நடிகர் கார்த்தி சந்தித்து உரையாடினார்.அவருடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார்/

ஜான் சீனாவுடன் எடுத்துக்கொண்ட ,போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் கார்த்தி பதிவிட்டுள்ளார்.’ஜான் சீனா உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, மிகவும் அன்பாக இருந்ததற்கு நன்றி’ என அதில் கார்த்தி பதிவு செய்துள்ளார்.அந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த உலக மல்யுத்தப் போட்டிக்கான இந்திய விளம்பரத் தூதராக கார்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *