‘சீயான்’ விக்ரம் நடித்துள்ள படம் ‘வீர தீர சூரன்’.
அவருடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அருண்குமார் இயக்கியுள்ளார்.
இந்தப்படம் , வியாழக்கிழமை பல சிக்கல்களை தாண்டி வெளியானது.
அன்றைய தினம், தமிழகத்தில் ஒரு சில திரையரங்குகளில் மாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. சில திரையரங்குகளில் மாலை 6 மணிக்கு காட்சிகளை திரையிட்டனர்.
தமிழகத்தில் இந்த படம் முதல் நாளில் சுமார் 3.5 கோடி வரை மட்டுமே வசூல் செய்தது. இதற்கு காரணம் காட்சிகள் குறைவானதே.
நேற்று கொஞ்சம் வசூல் அதிகம்.
இரண்டு நாட்களில் 7 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
சனி, ஞாயிறுகளில் கூட்டம் அதிகம் வரும்.
எளிதாக ரூ.15 கோடியை தாண்டி விடும்.
இது, தமிழக வசூல் நிலவரம்.
விமர்சனனங்கள் நல்ல படியாக இருப்பதால், படத்தின் வெற்றியும், வசூலும் விக்ரமுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
—