‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசனும், மணிரத்னமும் இணைந்துள்ள படம் –‘தக்லைஃப்’. உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் கமல் தவிர, சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் .இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளன
படத்தின் ஷூட்டிங், பல வெளிநாடுகளில் நடைபெற்றது. இப்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.
இதன் படப்பிடிப்பை முடித்து விட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கமல் அமெரிக்கா சென்றார். அங்கு அவர் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் குறித்து பாடம் பயின்றார்.
படிப்பு நிறைவடைந்த நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு ‘உலக நாயகன்’ கமல், நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதிகம் பேசவில்லை. ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5- ஆம் தேதி வெளியாகும்” என்றவரிடம் . ‘விக்ரம் 3’ படம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.’ அமெரிக்காவில் நான் வேறு ஒரு ‘ஸ்கிரிப்ட்’ எழுதியிருக்கிறேன்” என்று சொல்லி விட்டு நடையை கட்டினார்.
சுஜாதா எழுதிய ‘விக்ரம்’ கதையை அதே பெயரில், 1980 களில் சொந்தமாக தயாரித்தார், கமல். ராஜசேகர் இயக்கிய அந்தப்படம் , பெரிய ஹிட்.
பின்னர் ‘விக்ரம்’என்ற பெயரில் மீண்டும் ஒரு படத்தை சில ஆண்டுகளுக்கு முன் தயாரித்து நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்த படம் ,கமலுக்கு 100 கோடி ரூபாயை லாபமாக பெற்று தந்தது.
இதனால் ‘விக்ரம்’ மூன்றாம் பாகத்தை உடனடியாக அவர் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. மணிரத்னம் படத்தில் நடிக்க சென்று விட்டார்.
இந்த படத்தை தொடர்ந்து ‘விக்ரம்’ -3’ஆரம்பம் ஆகும் என , அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள்.ஆனால் அந்த படத்தை கமல் கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
காரணம் ?
லோகேஷ் கனகராஜ், இப்போது , ரஜினியின் ‘கூலி’படத்தில் ‘பிஸி’யாக இருக்கிறார். இதனை தொடர்ந்து ‘கைதி’ இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார்.
அதுவரை காத்திருக்க கமல் தயாராக இல்லை. ஸ்டண்ட் இயக்குநர் அன்பறிவ் , முதன் முறையாக டைரக்ட் செய்யும் படத்துக்கு கமல் கால்ஷீட் கொடுத்துள்ளார்.விரைவில் அதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.
அந்த படம் முடியும் போது ,தமிழக சட்டசபை தேர்தல் வந்து விடும். கமல்,பிரச்சாரத்துக்கு கிளம்பி விடுவார்.
‘விக்ரம் ‘3’ , எப்போது என்பது கமலுக்கே வெளிச்சம்.