ஆகஸ்டு,10
அமைச்சசர் செந்தில் பாலாஜியிடம் தற்போது அமலாக்கத் துறை நடத்தும் விராணை முடிந்த பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார என்ற கேள்வி எழுந்து உள்ளது. விசாரணையின் போது புதிய ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவரை பிணையில் விடுவிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று வருமான வரித்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்து உள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி மேலும் கூறியதாவது..
அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை விசாரித்து வருதால், அவர் குற்றவாளி அல்ல. ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் போதிய ஆதாரங்கள் இல்லாமல் ஒருவரிடம் விசாரணைக்கு செல்வது வழக்கம் இல்லை. ஒருவர் மீதான குற்றங்கள் தொடர்பான ஆதராங்களை சேகரித்துக் கொண்டு, அதை உறுதி செய்வதாற்காக மட்டுமே அவருடைய வீட்டிற்குள் செல்வார்கள். எனவே முன்கூட்டியே ஆதாரங்களை திரட்டிவிட்டுத்தான் அமலாக்கத்துறை நடவடிக்கையில் இறங்கும்.
ஒருவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு முன்பே அவரைப் பற்றிய ஆதாரங்களை பெற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் விசாரிக்கும் நடைமுறையைதான் அமலாக்கத்துறை பின்பற்றுகிறது. விசாரணையின் போது மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பார்கள். ஆனால் கேள்விகள் கடுமையானதாக இருக்கும். ஒவ்வொரு குற்றத்துக்கும் உரிய ஆதாரங்களை எடுத்துக் காட்டி விளக்கம் கேட்பார்கள்.
ஒருவருக்கு குழந்தை , மனைவி , நண்பர் போன்ற மிக அக்கறையான நபர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றிய சில கேள்விகளை முன் வைக்கும் போது விசாரிக்கப்படும் நபர் உணர்ச்சி வசப்படுவார். இது உணர்ச்சிப் பூர்வமான விசாரணை முறை. இது போன்ற மன அழுத்தம் தரும் முறைகளையும் மேற்கொள்வார்கள்.
விசாரணை முடிந்தவுடன் பிணை கிடைத்துவிடும் என்று கூற முடியாது , குற்றத்தின் தன்மையை பொறுத்தே நீதிமன்றம் பிணை வழக்குவது குறித்து முடிவு செய்யும். பிணை கொடுக்கும் முன்பு முறைகேடாக பெற்ற பணம் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா , அந்நிய சக்திகளுக்கு பயன்பட்டதா என்பதை பார்ப்பார்கள் . பணம் கைமாறியதை தவிர வேறு எந்த சட்டவிரோதமும் இல்லை என்றால் பிணை கிடைக்கும்.
ஆனால் காவிலில் எடுத்து விசாரிக்கும்போது புதிதாக ஏதும் முறைகேடு கண்டறியப்பட்டால் பிணை கிடைக்காது. ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு வலுவாக இருப்பதாக தெரிகிறது , அதிலிருந்து அவர் வெளிவருவது எளிதானதாக தெரியவில்லை.
இவ்வாறு பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
0000