‘விஜய்யின் ‘சச்சின்’ திரைப்படம் அடுத்த மாதம்
மறு வெளியீடு செய்யப்படுகிறது .
அரசியலில் குதித்துள்ள ‘இளையதளபதி’ விஜய்
நடிக்கும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. தமிழக
சட்டசபை தேர்தல் நெருக்கத்தில் இந்தப்படம்
ரிலீஸ் ஆகிறது.
அவர் நடித்த பழைய படங்கள் இப்போது, தூசி
தட்டி ரீ – ரிலீஸ் ஆகின்றன.
சில மாதங்களுக்கு முன் விஜய் நடித்த ‘கில்லி’
திரைப்படம் மீண்டும் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றது. நேற்று ‘பகவதி’ வெளியானது.
விஜய் நடித்த ‘சச்சின்’ படம் மறு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. அடுத்த மாதம்18 – ஆம் தேதி ‘சச்சின்’ வெளியாகும் என்று தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.
மறைந்த இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, பிபாஷா பாசு, வடிவேலு, தாடி பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘சச்சின்’.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.
சச்சின் வெளியான அதே நாளில்தான் ரஜினியின்
சந்திரமுகியும் வெளியானது.
—