‘ஓ..மை கடவுளே’ படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன அஸ்வத் மாரிமுத்து, முதல் படத்திலேயே, கோடம்பாக்கத்தின் கவனத்தை ஈர்த்தார்.
தனது அடுத்த படமான ‘டிராகன் ‘ படத்தில் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக்கினார்.
கயாடு லோஹர், அனுபமா பரவேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்த ‘டிராகன்’ 150 கோடி ரூபாயை தாண்டி வசூலித்து தமிழ் திரை உலகை மிரள வைத்துள்ளது.
டைரக்டர் அஸ்வத் மாரிமுத்துவை அண்மையில் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த், நேரில் அழைத்து பாராட்டினார்.
இந்த நிலையில் நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜயை. அஸ்வத் மாரிமுத்து நேற்று நேரில் சந்தித்து பேசினார்
.விஜயுடனான சந்திப்பை தனது ‘எக்ஸ்’தளத்தில் போட்டோவுடன் வெளியிட்டுள்ள அஸ்வத் மாரிமுத்து, உருக்கமான தகவல் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
அதில்’ நான் விஜயின் தீவிர ரசிகன் – கடுமையாக உழைத்து, முழு தகுதி பெற்று விஜயை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. இந்த சூழலில் விஜயை சந்தித்தேன் – அவர் என்னை கூர்ந்து நோக்கினார்.
அப்போது நான் அழுது விட்டேன். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது –என்னுடன் வந்திருந்த படக்குழுவினர் வியப்போடு என்னை பார்த்தனர்
. ஏன் அழுதேன் –விஜய் மீது அவ்வளவு அன்பு . எவ்ளோவ் ?.அதை எல்லாம் உங்களிடம் சொன்னால் புரியாது’ என குறிப்பிட்டுள்ளார், அஸ்வத் மாரிமுத்து.
—