ஆகஸ்டு,31-
இளைய தளபதி விஜய்க்கு மூன்று வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லீ. முதன் முறையாக அவர்
இந்திக்கு சென்றுள்ளார். ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜவான்’படத்தைஇயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கோடம்பாக்க நட்சத்திரங்களின் ஆதிக்கம் ரொம்பவே ஜாஸ்தி. நயன்தாரா, விஜய் சேதுபதி,பிரியாமணி,யோகிபாபு நடித்துள்ளனர். தமிழில் பட்டையை கிளப்பி வரும் அனிருத்தும், முதன் முறையாக இந்தப்படம் மூலம் இந்தி திரை உலகில் நுழைந்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வரும்.7ஆம் தேதி படம் வெளியாகிறது.ஜவான்’ பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. ஷாருக்கான் அரங்கில் நுழைந்த போது ரசிகர்கள் ஆரவாரத்தில் கத்தி
கூச்சலிட்டனர்.விழா மேடையில், விஜய் சேதுபதியை கட்டியணைத்த, ஷாருக்கான், அனிருத்துக்கு முத்தம்
கொடுத்தார்.
இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அட்லி, என்அண்ணன் விஜய்தான் ஜவான் உருவாக முக்கிய காரணம். நீ என்ன பண்ணுவனு தெரியாது, இந்த படத்த நீ
பண்ணணும்னு விஜய் அண்ணான் சொன்னாரு, என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்., “என்னுடைய முதல் இந்தி படமே ஷாருக்கானுடன் அமைந்தது இறைவனின் செயல். இந்தப்படம் தமிழிலும் ஹிட்டாகும். இது இந்தி படமல்ல- இந்தியன் படம்” என குறிப்பிட்ட அனிருத், இந்தி பட அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் வீடியோ கால் மூலமாக கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். விஜய்காந்த் நடித்த ‘பேரரசு’படத்தின் கதையை தழுவி,ஜவான் உருவாக்கப்பட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில், ஒரு
தகவல் உலவுவதை இங்கே குறிப்பிட வேண்டும்.