இயக்குநர் வெற்றிமாறனிடம் நீண்ட காலமாக உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் துரை செந்தில்குமார்.
இவர், ’எதிர்நீச்சல்’, ’காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’, ‘கருடன்’ உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
’கருடன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து , ’லெஜண்ட்’ சரவணன் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் துரை செந்தில்குமார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்டு கொண்டே
போகிறது. எப்போது முடிவடையும் என்பது
செந்தில்குமாருக்கு தெரியவில்லை.
இதனால் தனது அடுத்த படத்தை உடனடியாக
தொடங்க முடிவு செய்திருக்கிறார் துரை செந்தில்குமார்.
இரண்டு பிரதான நாயகர்களை மையமாக வைத்து, இதன் கதையை உருவாக்கியுள்ளார்.அந்த கதாபாத்திரங்களுக்கு விஜய் சேதுபதியும், சசிகுமாரும் பொருத்தமாக இருப்பார்கள் என்பது அவரது எண்ணம்.இருவரிடமும் கதை சொல்லி விட்டார்.
அவர்களும் ஓகே சொல்லி விட்டனர்.
விரைவில் படத்தின் ஷுட்டிங் ஆரம்பமாகும்.
—