May 29, 2023
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி எப் -12 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எஃப் 12 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்துள்ளது. காலை 10.41 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்எல்வி எஃப் 2 ராக்கெட் 2232 கிலோ எடை கொண்ட என்விஎஸ் 0.2 என்ற செயற்கைக்கோளை தாங்கி செல்கிறது. இதற்கான 27½ மணி நேர ‘கவுண்ட் டவுன்’ நேற்று தொடங்கிய நிலையில் இது புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு செயற்கைக்கோளை உத்தேசித்துள்ள சுற்றுப்பாதைக்கு எடுத்து செல்ல அடுத்தடுத்த சுற்று பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கும் என்று தெரிகிறது.
நேற்று காலை 7: 21 நிமிடத்திற்கு கவுண்ட்டவுன் தொடங்கிய நிலையில் இன்று ஜிஎஸ்எல்வி எஃப் 12 ராக்கெட் விண்ணில் பாய்ந்துள்ளது. இந்த செயற்கைக்கோள் தரை,கடல், வான்வழிப் போக்குவரத்தை கண்காணிக்கும் பேரிடர் காலங்களில் துல்லியமான தகவல்கள் தெரிவிக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.