விபத்தில் சிக்கிய ‘டைட்டன்’ நீர்மூழ்கி… ட்ரோல் செய்யப்படும் நெட்ஃப்ளிக்ஸ் – காரணம் என்ன?

ஜூன், 26-

கடந்த வாரம் வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடலுக்குள் வெடித்தை அமெரிக்க கடற்படை உறுதி செய்தது. இந்தச் சூழலில் ஓ.டி.டி. ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பதைப் பார்ப்போம்.

கனடா அருகே அட்லாண்டிக் கடலில் 12,500 அடி ஆழத்தில் கடந்த 1912-ம் ஆண்டு மூழ்கி, சிதைந்து கிடக்கிறது டைட்டானிக் கப்பல். அதனைப் பார்வையிடுவதற்காக, அமெரிக்காவின் ஓசன்கேட் என்ற  நிறுவனம்  டைட்டன் என்ற  நீர்மூழ்கி கப்பல் மூலம் பயணிகளை அழைத்துச் சென்று வந்தது.  கடந்த 18-ம் தேதி அந்த நீர்மூழ்கிக் கப்பலில்  5 பேர் பயணம் செய்தனர். இவர்கள் அனைவருமே பெரும் கோடீஸ்வரர்கள்.  ஆழ்கடலுக்குள் சென்ற  டைட்டன் வெடித்த காரணத்தால் இவர்கள் 5 பேரும் உயிரிழந்து விட்டனர். அவர்கள் பயணித்த நீர்மூழ்கியின் பாகங்கள், கடலுக்குள் டைட்டானிக் கப்பல் கிடக்கும் இடத்திலிருந்து சுமார் 1,600 அடி (487 மீ) தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘டைட்டானிக்’ திரைப படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன், டைட்டன் சாகச பயணம் குறித்து தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.  அந்த பதிவில் டைட்டானிக் படம் இயக்குவதற்காக அட்லாண்டிக் கடலில் மூழ்கியுள்ள கப்பலை பார்க்க 33 முறை ஆழ்கடலுக்குள் சென்று வந்ததாக குறிப்பிட்டு இருந்தார். அ

இத்தகைய சூழலில் அமெரிக்க நாட்டின் ஓ.டி.டி. ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், உலகம் முழுவதும் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெப் சீரிஸ், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டு வருகிறது. அந்தத் தளத்தில் டைட்டானிக் திரைப்படம் மீண்டும் இடம்பெற உள்ளதாக சொல்லப்படுகிறது.

டைட்டானிக் கப்பலை பார்க்க ஆழ்கடலுக்குள் சுற்றுலா சென்றவர்கள் பயணம் சோகத்தில் முடிந்து இருக்கும் நேரத்தில் அதன் மூலம் கிடைத்து உள்ள விளம்பரத்தைப் பயன்படுத்தி நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் டைட்டானிக் படத்தை திரையிடுவது சரியா என்று வலைதளங்களில் கேட்டு வருகின்றனர்.

‘000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *