விமானக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரிப்பு.

டிசம்பர்-22.
கிறித்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உள்நாட்டு விமானக் கட்டணம் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்து உள்ளது,
சாதாரண நாட்களில் சென்னையில் இருந்து தூத்துக்குடி 4,800 ஆக இருந்த விமானக் கட்டணம் தற்போது 14,250 ஆக உயர்ந்து இருக்கிறது.
சென்னை-மதுரை கட்டணம் ரூ 4,300- ல் இருந்து 17,700 ஆகவும். சென்னை- திருச்சி கட்டணம் ரூ 2,390- ல் இருந்து ரூ 14,400 ஆகவும், சென்னை -கோயம்புத்தூர் கட்டணம் ரூ 3500- ல் இருந்து ரூ 10 ஆயிரமாகவும் அதிகரித்து உள்ளது.
சென்னை – சேலம் ரூ 3,600-ல் இருந்து ரூ 8000 ஆகவும் செனன்னை -கொச்சி கட்டணம் ரூ 3,700-ல் இருந்து ரூ 18,000 ஆகவும் சென்னை- திருவனந்தபுரம் கட்டணம் ரூ 3.900-ல் இருந்து ரூ 13,300 ஆகவும் சென்னை-மைசூர் கட்டணம் ரூ 3450- ல் இருந்து ரூ 10,000 ஆகவும் ஏறியிருக்கிறது.
இதே போன்று சென்னயில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர். பாங்காங்.கொழும்பு, துபாய் போன்ற வெளிநாட்டு நகரங்களுக்குச் செல்வதற்குமான விமானக் கட்டணம் கூடியுள்ளது.
*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *