வலிமையாக உள்ள கட்சிகளில் உள்கட்சி பூசல் இருப்பது சகஜம். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிலும் மாவட்ட வாரியாக மோதல் உண்டு.
தூத்துக்குடி மாவட்டம் அதற்கு விதி விலக்கல்ல. அந்த மாவட்டத்தில் உள்ளதி.மு.க.வின் இரு அமைச்சர்களான அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், கீதா ஜீவனுக்கும் இடையேயான பனிப்போர் அனைவரும் அறிந்தது.
ஜெயலலிதா அ.தி.மு.க.பொதுச்செயலாளராக இருந்தபோது , தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க.வில் பல கோஷ்டிகள் இருந்தன.ஜெயலலிதா மறைவுகு பிறகு கட்சி மூன்றாக பிளவுபட்ட நிலையில்,ஒவ்வொரு கோஷ்டியும் ஒவ்வொரு தலைமையின் ( ஈபிஎஸ், ஓபிஎஸ் ,டி.டி.வி.தினகரன்) கீழ் சேர்ந்து கொண்டது.
எடப்பாடி பழனிசாமி அணியிலும் கோஷ்டி பூசல் இருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் வழிபடுவதற்காக ஈபிஎஸ் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம்தூத்துக்குடி வந்தார்.விமான நிலையத்தில் அவரை வரவேற்க அதிமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர்.
விமானநிலைய வாயில் பகுதியில் எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளரான கோவில்பட்டி சீனிராஜ், தனது ஆதரவாளர்களுடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜு, தனது படை –பரிவாரங்களுடன் அங்கு காரில் வந்திறங்கினார்.
சீனிராஜை பார்த்த ராஜுவுக்கு சிவ்வென்று முகம் சிவந்தது.
‘கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நீ, எப்படி ஈபிஎஸ்சை வரவேற்க வரலாம்?’ என கேட்டு அவரை வசை பாடினார்.திட்டித்தீர்த்தார்.
ராஜுவின் ஆதரவாளர்கள் சீனிராஜை அடிக்க ஆவேசமாகபாய்ந்தனர்.தள்ளுமுள்ளு ஏற்பட்டு இரு தரப்பும் மோதிக்கொள்ளும் சூழல் உருவானது. இதனால் விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்தததால், வன்முறை தவிர்க்கப்பட்டது.
பனிப்போராக இருந்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக கோஷ்டி மோ தல் வெட்ட வெளிச்சமாகி, அம்பலத்துக்கு வந்ததால் , ஈபிஎஸ்சை வரவேற்க வந்த கட்சிக்காரர்கள், நொந்து நூலாகி, கலைந்து போனார்கள்.
000