ஜனவரி-01.
கடந்த 36 நாட்களால உண்ணாவிரதம் இருந்து வரும் தங்கள் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவாலை மத்திய அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே அவருக்கு மருத்துவ உதவி அளிப்பதற்கு அனுமதி அளிப்போம் என்று பஞ்சாப் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனை பஞ்சாப் மாநில அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள கானௌரியில் நவம்பர் 26 முதல் தலேவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்க மத்திய அரசு ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.


தலேவாலின் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதை அடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உத்தரவுப் பிறப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை ஏற்று தல்வாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து அவரைக் காப்பாற்றுமாறு உச்ச நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது.
உடனே தலேவாலை நெருங்குவதற்கு பஞ்சாப் மாநில போலீசார் மேற்கொண்ட முயற்சிகள் திங்கட்கிழமை நடந்த விவசாயிகள் பந்த் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது என்று அரசின் அட்வகேட் ஜெனரல் குர்மிந்தர் சிங் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார் . மத்திய அரசு, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கடிதம் மூலம் உத்தரவாதம் கொடுத்தால் தல்வாலின் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக விவசாயிகள் தெரிவித்து இருப்பதாக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.


வழக்கு விசாரணை ஜனவரி 2-ஆம் தேதியான வியாழக் கிழமை மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அதன் பிறகுதான் தல்வால் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுவாரா என்பது தெரியவரும்
உண்ணாவிரதம் இருக்கும் தல்வாலை பல ஆயிரம் விவசாயிகள் சூழ்ந்து இருக்கிறார்கள். இதனால் காவல் துறை அவரை நெருங்க முடியவில்லை. விவசாயிகளை அப்புறப்படுத்திவிட்டு தல்வாலை நெருங்க முயன்றால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.
*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *