ஜனவரி -06,
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மதகஜராஜா’. விஷால் ஹீரோவாக நடித்துள்ளார்.
அவருடன் வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், சோனு சூட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார்
‘மதகஜராஜா ‘ 12 ஆண்டுகளுக்கு முன்பே தயாராகி விட்டது. பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிகொண்டே போனது. ஒரு வழியாக பொங்கல் திருநாளில் படத்தை வெளியிட உள்ளனர்.
படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விஷாலின் உடல்நிலை ‘கவலைக்குரியதாக இருந்தது.
கையில் மைக்கை பிடித்து அவரால் பேச முடியவில்லை. மைக்கை பிடித்ததும், விஷால் கைகள் நடுங்கின.ஒரு வழியாக பேசி முடித்தார். பார்வையாளர்கள் அதிர்ந்து போனார்கள்.
விஷாலுக்கு என்ன ஆச்சு ? என ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர்.
ரசிகர்களின் கேள்விகளுக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் பதில் அளித்தார்.
“விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல்- படத்தின் விளம்பர நிகழ்வுக்கு கடும் காய்ச்சலுடன் வந்துள்ளார்” என்று அவர் சொன்ன பிறகே ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
கை நடுக்கத்துடன் விஷால், பேசும் வீடியோ பதிவு, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
—