ஜனவரி -09,
சினிமா மற்றும் ரேஸ்களில் ஒரே சமயத்தில் பயணிப்பவர் ‘அல்டிமேட் ஸ்டார்’அஜித். சொல்லப்போனால், சினிமாவைவிட, ரேஸ்களையே அதிகம் நேசிப்பவர்.
விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் அவர் ஒரே நேரத்தில் நடித்து வந்தார்.
இரு படங்களிலும் நடித்து முடித்து விட்டு, துபாய் பறந்து விட்டார்.அங்கு நடைபெற உள்ள கார் ரேஸ் போட்டிகளில் அஜித் பங்கேற்கிறார்.
பயிற்சியின் போது அவர் ஓட்டிய கார் விபத்தில் சிக்கி, மயிரிழையில் உயிர் தப்பினார், அஜித்.
அவரது அடுத்த படத்தை இயக்கப்போவது யார் ? என கோடம்பாக்கத்தில் சூதாட்டமே நடக்கிறது.
சிவா டைரக்ஷனில் நடிக்கிறார், என ஒரு தரப்பு சொல்ல. இன்னொரு தரப்பு தேசிங்கு பெரியசாமிக்குத்தான் ,அஜித் அடுத்த படம் செய்கிறார் என சத்தியம் செய்கிறார்கள்.
நிஜம் என்ன ?
இரண்டு பேருமே இல்லை.
அஜித்தின் அடுத்த படத்தை விஷ்ணு வர்தன் , இயக்க உள்ளார்.
இவர் ஏற்கனவே அஜித்துக்கு ‘பில்லா -2’ ‘ஆரம்பம்’ ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்தவர்.’பில்லா -3’ படத்தில் இருவரும் இணைவதாக ஒரு திட்டம் இருந்தது.அது, கைவிடப்பட்டுள்ளது.
வேறு ஒரு கதையை அஜித்துக்கு சொல்லி விஷ்ணு. ஓ.கே.வாங்கி விட்டார். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். வேறு தொழில் நுட்ப கலைஞர்கள் முடிவாகவில்லை.
ரேசை முடித்து விட்டு , துபாயில் இருந்து அஜித், வந்ததும் படப்பிடிப்பு ஆரம்பம்.
–