காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வலிமையான தளங்களை கொண்டுள்ள எதிர்க்கட்சிகள், கொள்கை வேறுபாடுகளை மறந்து பாஜகவுக்கு எதிராக கை கோர்த்துள்ளன.
பாட்னாவிலும், பெங்களூருவிலும் ஒன்று கூடி, இந்தியா என தங்கள் அணிக்கு பெயர்சூட்டி உள்ள 26 கட்சிகள் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடக்க உள்ள நிலையில் சரத்பவார் , சலசலப்பை உருவாக்கியுள்ளார்.
இந்தியா கூட்டணியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜக, அந்த அணியின் முக்கிய தலைவரான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக பிளந்தது.
சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவாருக்கு , மகாராஷ்டிராவில் துணை முதலமைச்சர் பதவி கொடுத்து அவரை தங்கள் அணியில் இணைத்துக்கொண்டது.
சரத்பவாரையும் பாஜக கூட்டணிக்கு கொண்டு வர, அஜித் மூலம் பேரம் பேசி வருகிறது.
இநிநிலையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்வில் சரத்பவார் கலந்து கொண்டது, இந்தியா அணி தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
என்ன நிகழ்ச்சி?
சுதந்திர போராட்ட வீரர் லோக்மான்ய திலகர் பெயரிலான விருது மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் நேற்று பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு சரர்பவாருக்கு அழைப்பு அனுப்பி இருந்தார்கள்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட மூலகாரணமாக இருந்த மோடியின் விழாவை புறக்கணிக்குமாறு சரத்பவாரை சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின.
அதனை பொருட்படுத்தாமல் மோடிநிகழ்ச்சியில் சரத்பவார் பங்கேற்றார்.
பிரதமர் மோடியே சரத்பவாரைதேடிச்சென்று கை குலுக்கி நலம் விசாரித்தார்.
இருவரும் பரஸ்பரம் அன்பை பரிமாறிக்கொண்டனர்.
இந்த நிகழ்வு ,எதிர்கட்சிகள் மத்தியில் அதிர்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் மூன்றாவது ஆலோசனை கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்பாரா என்பதும் கேள்விக்குறியாகி விட்டது.