கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பி வைத்த தொகையில் மனைவிக்கு பங்கு உண்டா இல்லையா என்ற சர்ச்சை உயர்நீதிமன்றத்திற்கு வந்து உள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தான் வெளிநாட்டில் கடுமையாக உழைத்து வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமை கிடையாது என்று வழக்கில் தெரிவித்து இருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கணவன் பணிக்குச் சென்று சம்பாதிப்பதும், மனைவி குழந்தைகளை கவனிப்பதும் தான் பொதுவான குடும்ப அமைப்பு என்று கூறினார். குடும்பத்தை மனைவி கவனிப்பதால் தான் கணவரால் வெளியில் சென்று வேலை செய்ய முடிகிறது. எனவே கணவனின் சம்பாத்தியத்தில் வாங்கும் சொத்தில் குடும்பத் தலைவிக்கும் சமபங்கு பெற உரிமை உள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும் அவர், குடும்ப மருத்துவர் போல செயல்பட்டு குடும்பத்தையும், குழந்தைகளையும் 24 மணி நேரம் கவனிக்கும் மனைவி என்றாவது விடுமுறை எடுத்துக் கொண்டது உண்டா என்றும் கேள்வி எழுப்பினார். விடுமுறை இல்லாமல் குடும்பத்தலைவி மேற்கொள்ளும் பணியை, சம்பளத்திற்காக கணவன் பார்க்கும் எட்டு மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். கணவன் சம்பாத்தியம் மூலம் தன் பங்கை வழங்கினால், இல்லத்தரசியாக இருக்கக்கூடிய மனைவி குடும்பத்தை கவனித்து தன் பங்களிப்பை வழங்குவதால், சொத்தில் மனைவிக்கும் உரிமை உள்ளது என்றும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார்.
000