வேங்கைவயல் வழக்கில் சிக்கியவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லையா?

ஜனவரி-25.

வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்து உள்ள அறிக்கை ஏமாற்றம் அளிப்பதால் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு ஒப்படைகக் வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டு உள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் தமது அறிக்கையில் வேங்கை வயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களே குற்றம் செய்திருப்பதாக வழக்குப் பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்து உள்ளார்.

வேங்கை வயல் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டு உள்ள திருமாவளவன், வேங்கை வயல் விவகாரத்தில் நீதிகேட்டும் போராடும் விசிகவினரை அச்சுறுத்தி போலீசார் கைது செய்திருப்பதாக குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

வேங்கை வயல் விவகாரத்தில் தி.மு.க அரசு சமூகநீதியின் பக்கம் நிற்கும் என நம்புவதாகவும் ஆதாரங்கள் என வெளிவிடப் பட்டுள்ள ஆடியோ ஏற்கனவே சமூக வலைதளங்களில் உள்ளவைதான் என்றும் விசிக தலைவர் கூறியுள்ளார்.

திருமாவளவனின் அறிக்கைக்கு தமிழக அரசு பதிலளித்து உள்ளது.

வேங்கைவயல் சம்பவத்தில் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோரின் செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பகுப்பாய்வு செய்யப்பட்டது.

செல்ஃபோன்களில் இருந்து அழிக்கப்பட்ட உரையாடல்கள், புகைப்படங்கள் மீட்கப்பட்டு இச்சம்பவத்தில் அவர்களது தொடர்பு உறுதி செய்யப்பட்டது.

புகைப்படங்கள், செல்ஃபோன் உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல், மருத்துவ அறிக்கைகள் கொண்டே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவே வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.
இவ்வாறு தமிழக அரசு தமது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தின் மேல் நிலை குடிநீர்த் தொட்டியில கடந்த 2022- ஆம் ஆண்டு மலம் கலக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்த தமிழ்நாடு அரசின் சிபிசிஐடி போலீசார் உயா்நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் அதே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர்தான் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

இதில் சர்ச்சை என்ன என்றால் வேங்கை வயல் கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவரும் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை இழிவு செய்வதற்காக வேறு கிராமத்தை சேர்ந்தவர்கள் அல்லது வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தச் செயலை செய்தவர்களாக இருக்கலாம் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக வலை தளங்களில் கருத்துகள் பரவி வந்தன. இது உண்மையாக இருக்கலாம் என்று பலராலும் நம்பப்பட்டு வந்தது.
இந்தச் சூழலில் சிபிசிஜடி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிபிடப்பட்டு உள்ள மூன்று பேரும் அதே வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

நினைத்து ஒன்று நடந்தது வேறு என்பது போன்று வழக்கின் முடிவு வேறு மாதிரியாக இருப்பேதே சர்ச்சைக்கு காரணமாகும்.
*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *