நவம்பர்-29,
மதுரை அருகே உள்ள அரிட்டாபட்டியில் சுரங்கத் தொழிலை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அரிடடாபட்டியில் சுரங்க நடவடிக்கை மேற்கொண்டால் அது ஈடுசெய்ய முடியாத சேதங்களை ஏற்படுத்தும்.
மக்கள்தொகை அதிகம் உள்ள கிராமங்களில் சுரங்கம் தோண்டுவது மக்களை பாதிக்கும்.
வாழ்வாதாரம் பறிபோய் விடுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே இந்துஸ்தான் ஜிங் நிறுவனத்திற்கு வழங்கிய உரிமையை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
சுரங்கம் தோண்டுவதற்கு எதிராக அரிட்டாபட்டியில் கடந்த வாரம் ஐம்பது கிராமங்களின் மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து முதலமைச்சர் இந்த கடிதத்தை எழுதியிருக்கிறார்.
*.