ஆகஸ்டு, 01-
சென்னை அடுத்த முட்டுக்காட்டில் வானத்தில் தென்பட்டது பறக்கும் தட்டு கள் என்ற தகவல் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
இது தொடர்பான படங்களை தமிழக காவல் துறையில் டிஜிபியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிரதிப் வி பிலிப் வெளியிட்டதை அடுத்து விசாரணைகள் உருவாகி இருக்கிறது. கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் கடந்த புதன் கிழமை வானத்தில் பளிச்சென்ற ஒளியுடன் கூடிய மர்மமான சில பொருட்களை பார்த்து உள்ளார். முதலில் பிரதிப், அவை ட்ரோன் ஆக இருக்கலாம் என்று நம்பி இருக்கிறார். பிறகு உற்றுக் கவனித்த போது அது ட்ரோன் இல்லை என்பது அவருக்கு தெரிய வந்திருக்கிறது.உடனே அவற்றறை செல்போனில் பதிவு செய்து பார்த்த போது வியப்புதான் ஏற்பட்டு உள்ளது.
வேற்று கிரகங்களில் வசிப்பவர்கள் பறக்கும் தட்டுகளை பயன்படுத்தி பறப்பதாக உலவும் தகவல்களைப் படித்திருந்த பிலிப், முட்டுக்காடு கடற் பகுதியில் பறந்ததும் பறக்கும் தட்டுகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தோடு அந்த படங்களை மற்றவர்களுக்குப் பகிர்ந்து இருந்தார்.
இதை அடுத்து அவை பறக்கும் தட்டா? அல்லது ஆளில்லாத குட்டி விமானமா போன்ற கேள்விகள் எழுந்தன. உடனே நமது காவல் துறை,முட்டுக்காடு, கோவளம் போன்ற இடங்கள் கல்பாக்கம் அனுமின் நிலையத்திற்கு அருகில் உள்ளதால் அவை ரெட் சோன்-ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் ட்ரோன் போன்ற ஆளில்லாத குட்டி விமானங்கள் பறக்க முடியாது என்று விளக்கம் தந்தது.
யூஎஃப்ஓ எனும் பறக்கும் தட்டுகள் குறித்து ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சியாளர் சுபர் ஹூசைன்..
“முன்னாள் டிஜிபி செல்போனில் எடுத்தப் படங்களைப் பார்க்கும் போது அவை பறக்கும் தட்டுகளாக இருப்பதற்கான வாய்ப்புகளே உள்ளன. ட்ரோன்கள் வட்டமான வடிவத்தில் இருப்பதில்லை. அதுவும் கல்பாக்கம் அனுமின் நிலையம் அருகிலுள்ள பகுதியில் சோதனை முயற்சியாக கூட ட்ரோன்களை யாரும் இயக்க முடியாது.
பறக்கும் தட்டை ஒருவர் மட்டும் பார்த்ததாக கூறும் போது அதன் மீது சந்தேகம் ஏற்படுவது இயல்பு. பிரிட்டன் ராணுவ தளம் ஒன்றில் கடந்த 1980-ம் ஆண்டு 80 ராணுவ வீரர்கள் ஒரே நேரத்தில் பறக்கும் தட்டை பார்த்துள்ளதற்கு ஆதாரங்களும் உள்ளன. அமெரிக்காவில் கடந்த 2010 -ம் ஆண்டு ஒமேகா போர் கப்பல் அருகே கூட்டமாக பறக்கும் தட்டுகள் வந்து சென்றதும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு பறக்கும் தட்டுகள் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பார்த்தற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. எனவே சென்னை முட்டுக்காட்டில் வானத்தில் தென்பட்டவை பறக்கும் தட்டுகளாக என்பது குறித்து விரிவான ஆராய்ச்சி நடத்வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் முட்டுக்காட்டில் தென்பட்டது பறக்கும் தட்டா என்பதுக் குறித்து ஆய்வு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தயாவின் இ்ஸ்ரோ உலகளவில் விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் அமைப்பாகும். அந்த அமைப்பு நிலவுக்கு செயற்கைக் கோள்களை அனுப்பி சோதனை நடத்திக் கொண்டிருக்கிறது. அவ்வளவு நிபுணத்துவம் வாய்ந்த இ்ஸ்ரோ இது பற்றி வாய் திறக்காததால் பறந்தது வேற்று கிரகங்களில் வசிப்பவர்கள் அனுப்பிய பறக்கும் தட்டுகளா என்பதை நம்பவுது கடினமாக உள்ளது.
000