அதிமுக ஆட்சியில் அமைச்சதாக இருந்த போது போக்குவரத்துறையில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மத்திய குற்றப்பிரிவு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருக்கிறது. ஜூலை 6 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பணம் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் கடந்த 14-ந்தேதி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அடுத்த கட்ட விசாரணை நடத்த முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலையில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய 120 பேருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் ஜூலை 6-ம் தேதி உரிய ஆவணங்களுடன் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக மத்திய குற்றப்பிரிவு உத்தரவிட்டுள்ளது.