ஶ்ரீதேவி பிறந்த நாள், கூகுள் தந்த கவுரவம்.

தமிழிலும், இந்தியிலும் கனவுக்கன்னியாக ஜொலித்த ஸ்ரீதேவிக்கு நேற்று ( ஞாயிறு) 60 வது பிறந்தநாள்.

நான்கு வயதாக இருந்தபோதுகந்தன் கருணைபடத்தில்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.கே.பாலசந்தர், தனது மூன்று முடிச்சு படத்தில் ஸ்ரீதேவியை கதாநாயகி ஆக்கினார்.  எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி,கமல் ஆகியோருடன் நடித்தவர் எனும் பெருமைக்கு சொந்தக்காரர்.

தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியமொழிகளிலும் நடித்து, ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

தென்னிந்திய மொழிகளில் சூப்பர்ஸ்டாரினியாக இருந்த சமயத்தில் இந்தி சினிமாவுக்கு சென்று, அங்கும் உச்சம் தொட்டார். பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதல் திருமணம் செய்த ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய மகள்கள் உள்ளனர். இரண்டுபேரும் இப்போது நடிகைகள்.

2018 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது, மரணம் அடைந்தார். ஸ்ரீ தேவியின் 60வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நேற்றுஎளிமையாக கொண்டாடினர் .இதையொட்டி கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டது. ஸ்ரீ தேவியின் திரையுலக சாதனைகளை கவுரவிக்கும் விதமாக வெளியிடப்பட்ட அந்த டூடுல், இணையதளங்களில் வைரலானது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *