இந்தி சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ ஷாருக்கான் ,இப்போது மும்பையின் பந்த்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மன்னத் என்ற பங்களாவில் வசித்து வருகிறார்.
25ஆண்டுகளாக குடியிருக்கும் அந்த வீட்டை புனரமைக்க அவர் முடிவு செய்துள்ளார். கடலோர பகுதியில் உள்ள அந்த வீட்டை இடித்துக்கட்ட மும்பை மாநகராட்சியில் அண்மையில் அனுமதி வாங்கினார்.
புதிய இல்லம் ரெடி ஆகும்வரை வாடகை வீட்டில் குடியேற ஷாருக்கான் முடிவு செய்தார். பந்த்ராவின் பாலிஹில் பகுதியில் அவர் வாடகை வீடு பார்த்துள்ளார்.அந்த வீடு சினியா தயாரிப்பாளர் வாசு பக்னானி என்பவருக்கு சொந்தமானது.
சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் 4 மாடிகளை கொண்ட அந்த வீட்டில் சில நாட்களில் ஷாருக்கான் குடும்பத்துடன் இடம் பெயர்கிறார்.
இதற்காக, ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் பட நிறுவனம் வாசுவின் மகன் ஜாக்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
தன்னுடன், பாதுகாப்பு ஊழியர்கள், சமையல்காரர்கள் உள்ளிட்டோரும் தங்கவேண்டும் என நினைத்து ஷாருக்கான் 4 மாடிகளை வாடகைக்கு எடுத்திருக்கிறார்.
ஷாருக்கான குடிபோகும் புதிய வீட்டின் மாத வாடகை ரூ.24 லட்சம் .மன்னத் பங்களாவை புனரமைக்க 2 ஆண்டுகள் ஆகும் என தெரிகிறது. அதுவரை வாடகை வீட்டிலேயே, ஷாருக்கான் குடியிருப்பார்.
–