ஷாருக்கான் நல்லவரா, கெட்டவரா?

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி நடித்துள்ள படம், ‘ஜவான்’.

தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.

ஷாருக்கான் மனைவி கவுரி கான் தயாரித்துள்ள இந்தப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பட ரிலீசுக்கு  சரியாக ஒரு மாதம் இருக்கும் நிலையில்  ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தலையை மொட்டையை  அடித்து போஸ் கொடுத்திருக்கும் ஷாருக்கான் அந்த பதிவில் “நான் நல்லவனா? கெட்டவனா?.. 30 நாட்களில் தெரிந்துவிடும்… ஜவான் படம் உலகம் முழுவதும் 7, செப்டம்பர் 2023 அன்று ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷாருக்கான் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது/

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *