ஜனவரி-05.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களில் வாழ்ந்தவர்கள் எழுதிய எழுத்தை படித்துக் காட்டுகிறவர்களுக்கு எட்டரைக் கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு உள்ள பரிசை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் ?
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்து வெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கு சென்னையில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் கருத்தரங்கை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கண்ட பரிசுத் தொகையை அறிவித்து உள்ளார்.
இப்போதைய பாகிஸ்தான் நாட்டில் சிந்து நதியை ஓட்டிய நிலப்பரப்புகளில் கடந்த 1861 – ஆம் ஆண்டில் ரயில் பாதை போடுவதற்கு நிலத்தை தோன்டிய போது ஏராளமான கட்டிடங்கள் புதைந்து இருப்பது தெரியவந்தது. இதன் பின்னர் இந்திய தொல்பொருள் துறை தலைவர் ஜான் மார்ஷல் அங்கு நடத்திய ஆய்வில் மொகஞ்சதாரா, ஹரப்பா போன்ற புதையுண்ட நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நகரங்கள் கி.மு.ளு 3300 ஆண்டு முதல் கி.மு.1300 ஆண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டன. இரண்டு நகரங்களிலும் வாழ்ந்தவர்கள் மிகவும் நல்ல பொருளாரதர நிலையில் இருந்ததும் அவர்களுடைய வாழ்க்கையில் திமில் உள்ள காளைகள் மிக முக்கியமானதாக இருந்ததும் ஆய்வுகளில் தெரியவந்தது.
சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மொகஞசதரா, ஹரப்பா நாகரிகம் உலகத்தின் மிகவும் பழமையான நாகரிகம் என்றும் ஜான் மார்ஷல் தெரிவித்தார்.
இதன் பிறகு கடந்த 1924- ஆம் ஆண்டில் சிந்து வெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகம் என்றும் அறிவிப்பு வெளியானது. அதாவது மேற்கு ஆசியா போன்ற இடங்களில் இருந்து ஆரியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்து வெளி நாகரிகம் இருந்துள்ளது என்பதும் அந்த நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதும் தமிழ்நாட்டில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதாவது சிந்து சமவெளியில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரசுகளும் அங்கு வாழ்ந்தவர்களும் தமிழ் மொழியோடும் தமிழ்நாட்டோடும் எதோ ஒரு வகையில் தொடர்புடையவர்கள் என்பதும் அனைவரையும் பெருமைக் கொள்ளச் செய்தன.
ஆனால் சிந்து வெளியில் கிடைத்த எழுத்து வடிவங்களை யாராலும் படிக்க முடியவில்லை. பல் வேறு அறிஞர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டும் இதனை படிகக் முடியாதது பெரும் ஏமாற்றமாகவே இருந்து வருகிறது.
இப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அந்த சிந்து வெளி எழுத்துப் புதிரை விடுவிப்பவர்களுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். அதாவது எட்டு கோடியே அறுபது லடசம் ரூபாய்.
தமிழ் நாடு அரசு அறிவித்த பரிசுத் தொகைகளிலேயே இதுதான் மிக அதிகமான தொகையாகும்.
*