ஜனவரி -05,
திமுக கூட்டணயில் இடம் பெற்றுள்ள மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளார் கே.பாலகிருஷ்ணண் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. அவர் பேசியிருப்பது திமுக கூட்டணியில் இருந்த அந்தக் கட்சி விலகுவதற்கான அச்சாரம் என்றும் சொல்கிறார்கள்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு பொதுக்கூட்டம் நேற்று நடைப்பெற்றது. அதில் பேசிய மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி சில கேள்விகளை எழுப்பினார்.
“ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னாலே காவல்துறை வழக்கு போடுகிறது. மாண்புமிகு மரியாதைக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப் படுத்திவிட்டீர்களா நீங்கள்?
எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது? போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா?’ எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும்”
இது தான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
இதுதான் பாலகிருஷ்ணன் பேசியது. அவருடைய இந்தப் பேச்சு பற்றி ஆளுக்கு ஒரு கருத்துச் சொல்கிறார்கள். கூட்டணியை விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலகுவதற்கான அச்சாரம் இது என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். கட்சித் தொண்டர்களின் மனக்குமுறலைதன் பாலகிருஷ்ணன் வெளியிட்டார் என்று இன்னொரு தரப்பு விளக்கம் கொடுக்கிறது.
இதனிடையே விழுப்புரம் மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பெ.சண்முகம தேர்வு செயய்ப்பட்டு உள்ளார். கே. பாலகிருஷ்ணனின் பதவிக் காலம முடிவடைந்ததை அடுத்து இந்த தேர்வு நடைபெற்று இருக்கிறது. பெ சண்முகம் கட்சியின் மலை வாழ் மக்கள் சங்கச் செயலாளராக பணியாற்றி வந்தார்.
*