வாரங்கல்- நவ- 20.
தெலங்கானா மாநிலம் வாரங்கலில் ஸ்டேட் பேங்க் லாக்கரில் இருந்து ரூ 14.94 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கிக் கட்டிடத்தின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், எச்சரிக்கை மணிக்கான ஒயர்களை அறுத்து, பின்னர் கேஸ் கட்டர் மூலம் லாக்கரை உடைத்து நகைகளை திருடியுள்ளனர்.
கொள்ளையர்கள் சிசிடிவி கேமரா ரெக்காடரையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.
வங்கியில் காவல் பணிக்கு யாரும் இல்லாதது கொள்ளையருக்கு சாதகமாகிவிட்டது.
*