மே.19
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 10ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ-மாணவியர் எழுதியிருந்தனர். விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்த நிலையில், கடந்த 8ம் தேதி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார் .10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவியரில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 94.66%, மாணவர்கள் 88.16% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம்(97.67%) முதலிடம் பிடித்துள்ளது . 2வது இடத்தை சிவகங்கையும்( 97.53%), 3வது இடத்தை விருதுநகர் மாவட்டமும்(96.22%)பிடித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 264 சிறைவாசிகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.