100- வது படம், இயக்குநர் பிரியதர்ஷன் நெகிழ்ச்சி.

ஜுலை,30-

இந்திய சினிமாவில் குறிப்பிடும் படியான டைரக்டர்களில் ஒருவர் பிரியதர்ஷன் .

1984 -ஆம் ஆண்டு மலையாள சினிமா மூலம்  திரைஉலக வாழ்க்கையைஆரம்பித்த .பிரியதர்ஷன், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட அனைத்து பிரபல நடிகர்களையும் ஆட்டு வித்தவர்..

இதுவரை 96 படங்களை இயக்கி உள்ளார். மலையாளம் தவிர  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களும் டைரக்டு செய்துள்ளார் அவர் இப்போது இயக்கி உள்ள ‘அப்பத்தா’ என்ற படம்  ஓடிடிதளத்தில் வெளியாகி உள்ளது. ஊர்வசி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படம் குறித்து பிரியதர்ஷன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதன் விவரம்:

’அப்பத்தா’ – ஒரு மராட்டிய எழுத்தாளரின் கதை.முதலில் இந்த படத்தை இந்தியில் இயக்கித் தருமாறு என்னை அணுகினார்கள். ஆனால் நான் தமிழில் வேண்டுமானால் இயக்கித் தருகிறேன் என்று சொல்லி இந்த படத்தை இயக்கி இருக்கிறேன்.

நாய்க்கும், வயதான அப்பத்தாவுக்கும் இடையிலான அன்பின் மூலம் மனிதர்களுக்கும் விலங்கிற்குமான  அன்பை பேசுகிற படம்.  30 நாளில் ஷுட்டிங்கை முடித்தோம். கடைசி நாளில் , அந்த நாயை பிரிய முடியாமல் யூனிட்டே அழுதது.

ஊர்வசியை தவிர இந்த கேரக்டரில் வேறு யாராலும் இத்தனை சிறப்பாக நடித்திருக்க முடியாது. அவர் வாழும் மனோரமா. அவரை குழந்தை நட்சத்திரத்தில் இருந்து, அறிவேன். .

இதுவரை 96 படங்களை இயக்கி விட்டேன்.  இன்னும் 4 படங்களை டைரக்ட் செய்து விட்டு, நூறாவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகப்போகிறேன்.

இருந்து விலகப்போகிறேன்.

ஏன்?

பயம்தான் காரணம்.

வெற்றி படம் கொடுத்து விட்டால் அடுத்த படமும் வெற்றி பெற வேண்டும் என்ற பயம் வந்து விடும்.

தோல்வி படம் கொடுத்தால்?

அடுத்த படமும் தோல்வி அடைந்தால் என்ன செய்வது என்ற பயம் வரும்.

இந்த பயம்தான் என் பலமும், பலவீனமுமாக இருந்திருக்கிறது.’’என மனம் திறந்தார்,பிரியதர்ஷன்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *