தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் யார்? ரஜினியா?விஜய்யா? வலுக்கிறது சர்ச்சை.

ஆகஸ்டு, 04-

கடந்த 40 ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுகிறார் , ரஜினிகாந்த்.

100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் பெறும்  விஜயை அடுத்த சூப்பர்ஸ்டார் என முன்னிறுத்தும்  வேலைகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு விழாவில் பேசிய நடிகர் சரத்குமார்,’அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்தான்’ என பிள்ளையார் சுழி போட்டார். வாரிசு படத்தை தயாரித்த தில்ராஜு, தனது பட விழாவில் பேசும் போது,’விஜய்தான் சூப்பர்ஸ்டார்’என வழி மொழிந்தார்.

ஜெயிலர் பட விழாவில், இந்த விவகாரம் உச்சமானது.

அந்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்’’ இந்திய திரை உலகில் ரஜினி சார் மட்டும்தான் சூப்பர்ஸ்டார்.இதுதான் உண்மை’என்று புகழாரம் சூட்டினார்.

இதனை தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த்’சூப்பர்ஸ்டார் பட்டம் எப்போதுமே தொல்லைதான்’என குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் தேவை இல்லாமல் தலையிட்ட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு,’சினிமாத்துறையில் ஒரு சூப்பர்ஸ்டார்தான் இருக்க முடியும் என்ற நிலை மாறி விட்டது’ என கருத்து தெரிவித்தார். கோடம்பாக்கத்தில் இப்போது எல்லோருமே இந்த பிரச்சினை குறித்தே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபுவிடம்,, “அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என அவரது ரசிகர்கள் கூறுகிறார்களே?” என கேள்வி கேட்கப்பட்டது..

“எங்கள் அண்ணன் ரஜினிகாந்த் தான்சூப்பர் ஸ்டார் . மற்றவர்கள் சூப்பர் ஆக்டர்ஸ். ’என பதில் அளித்தார்.

ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்யநாராயணனும் இந்த விவகாரம் குறித்து மனம் திறந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த அவர்,’’சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிகாந்த்துக்கு மக்கள் வழங்கியது. மக்கள் விரும்பினால் அந்தப் பட்டத்தை யார் வேண்டுமானாலும் வாங்கட்டும்’என்றுதெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்’’’என் தம்பி ரஜினிகாந்த் மக்களுக்கு பல வகையில் சேவை செய்து வருகிறார்- 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளியாகிறது. பாப்பாத்தி அம்மன் அருளால் இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறும்- ரஜினிகாந்த் இன்னும் 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிக்க உள்ளார். தற்போது 5 படங்கள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது’’என்றார்.

அதெல்லாம் இருக்கட்டும்..ஒரு திரை உலகில் ஒரு சூப்பர் ஸ்டார்தான் இருக்க முடியுமா – அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருக்கலாமா என்பதுதான் கேள்வி.

பட்டிமன்றத் தலைப்பாக வைத்தால் வெகு மக்களை நன்றாக கவரும்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *