சளி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட கொடுமை கடலூர் அரசு மருத்துவமனையில் நடந்து உள்ளது.
செவிலியர்களின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நாய்க்கடி ஊசி போடப்பட்டதால் 12 வயது சிறுமி மயக்கம் அடைந்து விட்டார். உடனே அவருக்கு மயக்கத்தை தெளிவிப்பதற்கான சிகிச்சை தரப்பட்டது. நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர்கள் மீது சிறுமியின் தந்தை போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.
இதையடுத்து செவிலியர் கண்ணகி பணி இடை நீக்கம் செய்யப்ட்டு உள்ளார்.
000