*தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் … அண்ணாமலை பகல் கனவு காண்பது போல மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் பின்பற்றுவதற்கான வாய்ப்பு இல்லை என்று தமிழ்நாடு அரசு விளக்கம்.
*தமிழ்நாடு அரசு செய்ததை, தேசிய கல்விக் கொள்கையில் இணைத்துவிட்டு தேசிய கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு செயல்படுகிறது என்று சொல்வது நகைப்புக்குரியது …பெரியார் காட்டிய பாதையில் தமிழ்நாடு அரசு முற்போக்குப் பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும் என்றும் தமிழக அரசு அறிக்கை.
*கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இருந்து இந்திய ஒற்றுமை நியாய பயணத்தை தொடங்கினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி … இம்பால் கிழக்கு மாவட்டத்திலிருந்து பயணத்தை தொடங்க அரசு அனுமதி கொடுக்காததால் தவ்பேல் நகரத்தில் இருந்து பயணம் ஆரம்பம்.
* மணிப்பூரில் இழப்புகளை சந்தித்தித்து உள்ள லட்சக்கணக்கான மக்களின் கண்ணீரை துடைக்கவில்லை … மணிப்பூர் மக்களின் வலியை நாங்கள் புரிந்துள்ள காங்கிரஸ் திரும்பவும் அமைதியை கொண்டு வரும் என்று மணிப்பூரில் பாரத் நியாய யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி பேச்சு.
*அரசுப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை கொடையாக வழங்கிய மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து … ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில், குடியரசு நாள் விழாவில் சிறப்பு விருது வழங்கப்படும் என்றும் அறிவிப்பு.
*பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 7,474 அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் பேர் பயணம் … நேற்று ஒரே நாளில் மட்டும் 2,210 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல்.
*பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் இதுவரை இல்லாத அளவில் அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்… பேருந்து நிலையங்களில் கடந்த 2 நாட்கள் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு மக்கள் பாதுக்காபான பயணம் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டதாகவும் விளக்கம்.
*போகி பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை எரித்ததால் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு … ராயபுரத்தில் காற்ற மாசு குறியீடு 770 ஆகவும், பெருங்குடியில் 609 ஆகவும் பதிவு.
*சென்னையில் காலையில் நிலவிய பனி மூட்டத்துடன் போகி புகையும் கலந்ததால் 50 விமான சேவைகள் பாதிப்பு …. 4 விமானங்கள் ஹைதராபாத் திருப்பி அனுப்பப்பட்டன, அந்தமான் புறப்பட வேண்டிய ஒரு விமானம் ரத்து. மேலும் 21 விமானங்களின் வருகையும், 24 விமானங்களின் புறப்பாட்டில்தாமதம்.
*தமிழ்நாடு அரசு பெரும் நிதி நெருக்கடிக்கும் இடையே பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூ பாய் வழங்கி உள்ளது …. பொங்கலை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வீடியோ வாழ்த்துச் செய்தியில் சொல்லாத பல திட்டங்களை செய்து சாதனைகளின் பேரரசாக திராவிட மாடல் அரசு திகழ்வதாகவும் பெருமிதம்.
*மதுரை அவனியாபுரத்தில் நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை அறிவித்தது மாநகர காவல்துறை… காளைகளுடன் வரும் உரிமையாளரும் உதவியாளரும் மதுபோதையில் இருக்கக்கூடாது, கத்திபோன்ற கூர்மையான ஆயுதங்களை வைத்திருக்க கூடாது என்றும் உத்தரவு.
*மதுரை மாவட்டத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகின்ற அவனியாபுரம் பகுதிகளில் மதுக்கடைகளை மூட வேண்டும் …பால மேட்டில் நாளை மறுநாளான 16-ஆம் தேதியும் அலங்காநல்லூர் பகுதியில் ஜனவரி 17 -ஆம் தேதியும் மதுக்கடைகளை மூடுமாறு மதுரை ஆட்சியர் சங்கீதா உத்தரவு.
*திருச்சியில் தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயிலும் பட்டியல் இன மாணவர், தமக்கு மற்ற சமூக மாணவர்கள் இருவர் குளிர் பானத்தில் சிறு நீர் கலந்து கொடுத்ததாக தெரிவித்த புகார் … மாணவர்கள் இருவர் இடை நீக்கம் … விசாரணை நடத்தி வரும் பேராசிரியர்கள் குழு தாக்கல் செய்யும அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடு்க்க முடிவு.
*டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வேட்டி சட்டை அணிந்து பங்கேற்ற பிரதமர் மோடி அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் என்று தமிழில் வாழ்த்து …. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
*நாடு முழுவதும் சிறு தானிய உற்பத்தியில் 3 கோடி விவசாயிகள் பங்கேற்றுள்ளதாக டெல்லி பொங்கல் விழாவில் பிரதமா மோடி பேச்சு … வண்ணமிகு ரங்கோலி கோலத்தை் போன்றது நமது கலச்சாரம் என்றும் கருத்து.
*சபரி மலை ஐய்யப்பன் கோயிலில் நாளை மாலை மகர ஜோதி தெரியவுள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு …. அமைதியாக தரிசனம் செய்வதற்காக பலத்த பாதுகாப்பு.
*மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் முன்னணி நிர்வாகியும் முன்னாள் மத்திய அமைச்சருமான மிலிந்த் தியோரா கட்சியில் இருந்து விலகி முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார் … தெற்கு மும்பை நாடாளுமன்றத் தொகுதியில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா போட்டியிட காங்கிரஸ் கட்சி ஒப்புதல் தந்ததால் ஏற்பட்ட அதிருப்தியில் தியோரா விலகியதாக தகவல்.
*மாலத்தீவில் தங்கியுள்ள இந்திய ராணுவ வீரர்கள 88 பேரும் மார்ச் 15- ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று அதிபர் முகமது மிய்யூசு தலைமையிலான அரசு கண்டிப்பு …. இரண்டு மாதங்கள் முன்பு அதிபராக பதவி ஏற்ற மிய்யூசு முதல் பயணமாக சீனாவுக்கு கடந்த வாரம் சென்று வந்த பிறகு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரம்.
*கடந்த அக்டோபர் 7- ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் தொடங்கிய போர் 100- வது நாளை எட்டியது … காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவிகள் 24 ஆயிரம் இறப்பு.
*கடந்த அக்டோபரில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை இன்றோடு விலகியது … சென்னை வானிலை மையம் தகவல்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447