*சேலம் – ஆத்தூர் இடையே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் நாளை நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கு பிரமாண்டமான ஏற்பாடு … ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் மிகப்பெரிய பந்தல் அமைப்பு. மாநட்டில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சேலம் பயணம்.
*திமுக மாநாடு நடைபெற உள்ளதால் உளுந்தூர்பேட்டை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நாளை போக்குவரத்தில் மாற்றம்… சென்னையில் இருந்து ஈரோடு, கோவை செல்வோர் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி சலையில் செல்வது எளிது என்று கருத்து.
*பெத்த நாயக்கன் பாளையத்தில் திமுக இளைஞரணி மாநாட்டு திடலில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு … மாநாட்டின் சுடரை ஏற்றி வைத்து அதை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கி னார் ஸ்டாலின்.
*தமிழ் நாட்டில் பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் நரேந்திர மோடி திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் தரிசனம்… கோயிலுக்குள் நடைபெற்ற கம்பராமாயண பாராயணத்தையும் பிரதமர் கேட்டு ரசிப்பு.
*சென்னையில் ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் காலையில் விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார் … விமான நிலயைத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவரங்கத்தல் இறங்கி கோயிலுக்கு வந்த மோடிக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு.
*திருவரங்கத்தில் இருந்த ராமேஷ்வரம் சென்ற பிரதமர் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடிய பின்னர் ராமநாத சுவாமி கோயிலில் வழிபாடு … ராமேஷ்வரத்தில் ராமகிருஷ்ணா மடத்தில் தங்கி உள்ள பிரதமர் நாளை புனித நீரை சேகரித்துக் கொண்டு மதுரை வழியாக பயணம்.
*சென்னையில் ஆளுநர் மாளிகை செல்லும் சாலையில் கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தேசிய புலனாய்வு முகாமை குற்றப் பத்திரிகை தாக்கல் … பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக் கிழமை தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் வினோத் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு
*சென்னை, பல்லவன் இல்லத்தில் 100 BS-VI பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்… அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 1,666 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை;
*நாடாளுமன்ற தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது மதிமுக…. கட்சியின் அவைத் தலைவர் அர்ஜுனராஜ், பொருளாளர் செந்திலதிபன் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைப்பு.
*பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி மருமகள் செர்லினா, தங்கள் வீட்டில் வேலை செய்த சிறுமியை கொடுமைப் படுத்தியாக வெளியான தகவலை மறுத்து குரல் பதிவு வெளியீடு… அந்த சிறுமியை தங்கையை போல நடத்தியதாகவும் தேவையின்றி தங்கள் மீதும் மாமனார் மீதும் அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள்
*திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மகன் வீட்டில் தலித் மாணவியை சித்திரவதை செய்தவர்களின், பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும். … மாணவியை கொடுமைப்படுத்தியவர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்பவர்கள் மீதும் வழக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
*சிறார்களை வேலைக்கு அமர்த்தும் கொடுமையை தடுக்க அரசு ஆணையம் அமைக்க வேண்டும், திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் ஆகியோர் வீட்டு வேலைக்குச் சென்ற மாணவியை வதைத்துள்ளனர். நெஞ்சில் ஈரமின்றி இவ்வாறு கொடுமைப்படுத்தும் கொடிய போக்கு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கருத்து.
*வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதால் பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் ஆண்டோ தலைமறைவாகி விட்டதாக தகவல்… முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்ப்பு.
*தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே தடுப்பு சுவர் மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம். தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணி சென்ற வேன் சாலையோர தடுப்புச்சுவரில் மோதி கோர விபத்து.
*சென்னையில் மதுரவாயல் -துறைமுகம் இடையிலான உயர்மட்டச் சாலை பணிகள் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆரம்பம் … இரண்டு அடுக்குகளைக் கொண்ட மேம்பாலத்தை 2026 -ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்.
*அயோத்தியில் நளை மறுதினம் திங்கள் கிழமை நடை பெற உள்ள ராமர் கோவிலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்.. பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள்,தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்க இருப்பதால் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு.
*ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் ராஞ்சியில் அவரது இல்த்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை … சுரங்க முறைகேடு வழக்கில் அனுப்பட்ட சம்மனை ஏற்று நேரில் ஆஜராக மறுத்து வந்த்தால் விட்டுக்கு வந்து விசாரிக்கிறது அமலாக்கத் துறை.
*விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு பகுதிக்கு சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழி தவறியதால் பதற்றம். … கட்டுப்பாட்டு அதிகாரிகள் பைலட்டுக்கு விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கியது.
*சபரிமலை ஐயப்பன் கோயில் நடப்பாண்டு மண்டல, மகர விளக்குப் பூஜையில் ரூ.375 கோடி வருமானம். கடந்த ஆண்டை விட ரூ.10.57 கோடி கூடுதல் வருவாய் கிடைத்து உள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல்..
*அண்டை நாடான மியான்மரில் நடைபெறும் உள்நாடடுச் சண்டையால் முகாம்களை இழந்த ராணுவ வீரர்கள் 600 பேர் இதுவரை இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் தஞ்சம் … முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள ராணுவ வீரர்களை மியான்மர் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு மிசோரம் மாநில அரசு, மத்திய அரசுக்கு வேண்டுகோள்.
*ஊடுறுவலைத் தடுக்க இந்தியா – மியான்மர் எல்லை நெடுக கம்பி வேலி அமைக்கப்படு்ம் … மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு.
*இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெறும் மோதலை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவது அவசியம் …உகண்டா தலைநர் கம்போலாவில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்.
*பிரபல டென்னிஸ் வீராங்களை சானியா மிர்சாவின் முன்னாள் கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான சோயப் மாலிக்-க்கு சனா ஜாவித் என்ற பாகிஸ்தான் நடிகையுடன் திருமணம்…. கடந்த 2002- ஆம் ஆண்டில் ஆயிஷா என்பவரை திருமணம் செய்த மாலிக் 2010- ஆம்ஆண்டில் அவரை விவாகரத்து செய்துவிட்டு சானியா மிர்சாவை மணந்தவர்.
*தன்னிச்சையாக விவரகரத்து செய்யும் குலா என்ற இஸ்லாமிய முறைப்படி சோயப் மாலிக்கை சானியா மிர்சா விவகாரத்து செய்து விட்டதாக அவரது தந்தை தகவல் … சானியா மிர்சா தமது மகனுடம் இந்தியாவில் வசித்து வருகிறார்.
*திரைப்பட நடிகை ரஷ்மிகா மந்தனாவின் முகத்தை வேறு பெண்ணின் உடலோடு பொருத்தி வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட முக்கிய நபரை கைது செய்து டெல்லி போலீஸ் விசாரணை … செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் டீபேக் முறையில் தயாரிக்கப்பட்டு இருந்த வீடியோ வலைதளங்களில் வெளியாகி பெரும் கண்டனத்தைப் பெற்றது.
*கேலோ இந்தியா போட்டியில் முதல் தங்கத்தை வென்றது தமிழ்நாடு அணி….யோகா விளையாட்டில் ரித்மிக் ஜோடி பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரட்டையர்கள் சர்வேஷ், தேவேஷ் ஆகியோர் 127.89 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று அசத்தல்.
*தமி்ழ்நாட்டுக்கு கேலோ விளையாட்டுப் போட்டியில் இரண்டாவது தங்கமும் கிடைத்தது .. வாள்வீச்ச பிரிவில் தமிழக வீரர் கோவின் தங்கம் வென்று சாதனை.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447