12மணி நேர வேலை மசோதா வாபஸ் – மே தின நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மே.1

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து, 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தனார்.

இந்நிலையில், சென்னை சிந்தாந்திரிபேட்டையில் இன்று நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்டதாக அறிவித்தார். மேலும் மசோதா திரும்பப் பெறப்பட்ட விவரம், எம்எல்ஏக்களுக்கு செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தமிழகத்தின் வட, தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த 12 மணி நேர வேலை மசோதா கொண்டு வரப்பட்டது என்றும், பெரும் முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரவுமே மசோதா கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார். 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெற்ற பின்னரும் சிலர் அதுகுறித்து அவதூறு பரப்பி வருவதாகவும் அப்போது அவர் குற்றச்சாட்டினார்.

விட்டுக்கொடுப்பதை அவமானமாக நினைக்கவில்லை என்று கூறிய முதலமைச்சர், அதனை பெருமையாக கருதுவதாகவும் தெரிவித்தார். சட்டத்தை கொண்டு வரும் துணிச்சலும் அதை திரும்ப பெறும் துணிச்சலும் எங்களுக்கு உள்ளது. திமுக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை சட்டத்தை திமுக தொழிற்சங்கமே எதிர்த்ததை பாராட்டுகிறேன். திமுக ஐனநாயக இயக்கம் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *