ஏப்ரல்.17
ஐ.பி.எஸ் கிரிக்கெட் போட்டியின் 24வது லீக் ஆட்டத்தில் இன்று சென்னை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஐ.பி.எல் இறுதிப் போட்டி அமகதாபாத்தில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரை, ராஜஸ்தான் ராயல் அணியை வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் அணி கைப்பற்றியது. கடந்த ஆண்டு முதன் முதலாக ஐ.பி.எல் போட்டியில் களமிறங்கிய ஹர்திக் தலைமையிலான குஜராத் அணி, தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 24-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. சென்னை அணி இதுவரை ஆடிய 4 ஆட்டங்களில் 2 வெற்றி மற்றும் 2 தோல்விகளைப் பெற்றுள்ளது.
இந்த அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர், சிசாண்டா மகாலா ஆகியோர் காயம் காரணமாக இரு வாரங்கள் விளையாட முடியாத நிலை உள்ளது. ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்-க்கு காலில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அணியின் தலைவர் டோனிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி, இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டும் என முனைப்புக் காட்டிவருகிறது.
இதேபோல், பெங்களூரு அணியும் 4 போட்டிகளில் விளையாடி, 2 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த சீசனில் இதுவரை நடந்த 3 ஆட்டங்களில் 57 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 30 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியதில், 19 ஆட்டங்களில் சென்னையும், 10 ஆட்டங்களில் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றிரவு இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளது.